காதலியின் தொண்டையை தாறுமாறாக அறுத்த சைகோ காதலன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

135

உத்தரபிரதேச மாநிலம்…..

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பசோரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், இவர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சீமா என்ற இளம்பெண்ண காதலித்தார், இவர்களின் காதல் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே சென்றது.அந்த இளைஞர்பெண்ணை காதலித்தாரே தவிர அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வேலை ஏதும் இல்லை, ராஜேஷுக்கு ஒரு நிரந்தரமான வேலை இல்லாததால், அந்த பெண்ணுக்கு ராஜேஷ் மீது ஈர்ப்பு குறைந்தது.

ராஜேஷ் வேலை இல்லாதவர் என்பதால் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு பெண்ணை திருமணம் செய்து வைக்க சம்மதிக்கவில்லை, இதனால் அந்த பெண் மீது ராஜேஷுக்கு கோபம் ஏற்பட்டது, அதே நேரத்தில் அந்தப் பெண் வேறு ஒரு பையனை விரும்புவதாக ராஜேஷ் சந்தேகித்தார்.

இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்தது. இந்நிலையில் காதலியை தீர்த்துக் கட்ட ராஜேஸ் முடிவு செய்தார். இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு காதலி சீமா வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது கத்தியுடன் உள்ளே நுழைந்த ராஜேஷ் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த காதலியை கத்தியால் கழுத்தை டார் டாராக அறுத்தார். இதில் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அந்த பெண் உயிரிழந்ததைக்கண்டு ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் மகளே மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர், பின்னர் பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.