காரில் இருந்து இறங்கி வந்த சில நொடிகளில் தெறித்து ஓடிய பெண் அமைச்சர்! ஏன் தெரியுமா? வைரலாகும் காட்சி!!

737

பிரான்ஸில் பெண் அமைச்சர் ஒருவர் பதறிப்போய் அங்குமிங்கும் ஓடும் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.

பாரிசில் Bastille Day என்கிற ஒரு முக்கிய நாளில் கொண்டாட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக அமைச்சர்களும் முக்கியஸ்தர்களும் வந்து கொண்டிருந்த சமயத்தில் பிரெஞ்சு தொழில் துறை பெண் அமைச்சரான Agnes Pannier-Runacher காரிலிருந்து புன்னகையுடன் இறங்கி வருகிறார். சற்று நேரத்தில் அவர் பதற்றப்பட்டு தனது காரை நோக்கி ஓட முயற்சி செய்கிறார், ஆனால் அதற்குள் அவருடைய கார் சென்று விடுகிறது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

உடனே பதறிப் போய் செக்யூரிட்டியை தொடர்பு கொண்டு காரை திரும்ப அழைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். மேலும் தனது சக அமைச்சரிடம் ஏதோ சைகை காட்டுகிறார். அப்போதுதான் அனைவரும் புரிந்து கொள்கின்றனர், அந்தப் பெண் அமைச்சர் தனது மாஸ்க்கை காரிலேயே மறந்து விட்டு விட்டார் என்பதை.

குறித்த காட்சி இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றது.