கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த மணமகன் குடும்பத்தினர் : காரணத்தைக் கேட்டு ஆடிப்போன போலிஸார்!!

198

சேலம்….

சேலம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் தனுஸ்ரீயா- கீர்த்திராஜ் தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இந்நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி தனுஸ்ரீ தற்கொலை செய்துக்கொண்டதாக அவரது பெற்றோருக்கும் கணவனின் வீட்டார் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு, கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை வந்துள்ளது. மேலும் வரதட்சனை கேட்டு அவரை கொடுமைப்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

ஒரு கட்டத்தில் பிரச்சனை பெரிதாக வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கீர்த்திராஜ் மற்றும் அவரது பெற்றோர் கூட்டாக சேர்ந்து, தனுஸ்ரீ யை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி தனுஸ்ரீயாவை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக நாடகம் ஆடியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக கணவன் கீர்த்திராஜை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை போலீசார் நடத்தினர். பின்னர் வரதட்சனை புகார் தொடர்பாக சேலம் கோட்டாட்சியரிடம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து சேலம் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி பல்வேறு தரப்பிலும் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார். அதன் அடிப்படையில் தனுஸ்ரீயாவை அவரது கணவர் மற்றும் பெற்றோர் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கீர்த்திராஜின் தந்தை பெரியசாமி மற்றும் தாயார் ரஞ்சனி ஆகியோரை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.