கும்முனு இருந்த உடம்பை குச்சி ஐஸ் மாதிரி குறைத்த ஸ்ருஷ்டி டாங்கே.. டிப்ஸ் கேட்டு Fallow பண்ணுங்க!!

279

சிருஷ்டி டாங்கே..

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.

பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட ‘Survivor’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேறிவிட்டார்.தற்போது பட வாய்ப்புக்காக நிறைய போட்டோஷூட் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து பட வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், கொழுக் மொழுக்குன்னு இருந்த சிருஷ்டி டாங்கே 7 கிலோ வரை உடல் எடை குறைத்து சிக்கென மாறிவிட்டாராம்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அதற்காக அவர் தீவிரமாக யோகா பயிற்சி செய்வாராம். 10 மணி நேரம் தூங்குவாராம், நல்ல தூக்கம் உடலை ஃபிட்டாக வைத்திருக்குமாம். மேலும் ஆரோக்கியமான காலை உணவில் தொடங்கி இரவு சூப், ஸ்மூத்தி, முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றை டயட் உணவாக எடுத்து கொள்வாராம். இத்துடன் மாலை நேரத்தில் தொடர்ந்து சைக்கிளிங் , உடற்பயிற்சி செய்வாராம்.