“கூட போறது என் பொண்டாட்டி மாதிரியே இருக்கே”.. டூ வீலரை மடக்கிய கணவர்.. சிக்கிய மனைவி : நடுரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

824

உத்தர பிரதேசம்….

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா பகுதியை சேர்ந்த தம்பதி ஒருவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழ்நிலையில், சமீப காலமாக கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டும் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கு காரணம், அந்த பெண்ணுக்கு தொழிலதிபர் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தான் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த விஷயத்தை அந்த பெண்ணின் கணவர் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். இதன் பெயரில், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழ்நிலையில், ஒரு சில தினங்களுக்கு முன்பு நடந்த தகராறின் போது கணவனுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் அவரது மனைவி. இதன் பின்னர், காணாமல் போன தனது மனைவியை தேடி மகளுடன் கணவர் கிளம்பியதாக கூறப்படுகிறது.

பைக்கில் சாலை எங்கும் அந்த கணவர் தேடி சென்ற போது, ஆக்ராவில் உள்ள ஷிக்கந்த்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கைலாஷ் மந்திர் நெடுஞ்சாலை பகுதியில் வேறொருவருடன் தனது மனைவி இரு சக்கர வாகனம் ஒன்றில் செல்வதை பார்த்துள்ளார். இதன் பின்னர், பின்னாடியே சென்ற அந்த கணவர் ஒரு கட்டத்தில் வேகமாக போய் அவர்களை மடக்கி பிடித்துள்ளார்.

பின்னர், நடு ரோட்டில் வைத்து தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.