கொட்டும் மழையிலும் பொலிஸ் அதிகாரியின் செயல்: லைக்ஸ்களை குவிக்கும் வீடியோ காட்சிகள்!!

52

பொலிஸ் அதிகாரி…………

தூத்துக்குடியில் கனமழையிலும் தனது பணியை செய்யும் போக்குவரத்து காவலர் முத்துராஜாவின் வீடியோ வைரலாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதில் அணைகள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது, இந்த நிலையில் அடை மழையிலும் போக்குவரத்து காவலர் முத்துராஜா அயராது உழைக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தூத்துக்குடியில் பணியாற்றி வரும் போக்குவரத்து காவலர் முத்துராஜா, கனமழையில் வாகனங்கள் செல்வதை கண்காணித்து வழி நடத்துகிறார்.

இந்த வீடியோ வெளியானதும், சிறிது நேரத்திலேயே வைரலாக அம்மாவட்ட உயரதிகாரியின் கவனத்தை எட்டியது.

உடனடியாக விரைந்து சென்ற அதிகாரிகள் முத்துராஜீக்கு சம்பவ இடத்திலேயே பரிசை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.