கொரோனா காலத்தில் இணையத்தளத்தை பயன்படுத்தி தவறான தொடர்புகளை முன்னெடுத்துள்ள மாணவர்கள்!!

136

கொரோனா காலத்தில்..

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் 15 முதல் 20 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் இணையத்தளத்தை பயன்படுத்தி, கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் பா துகாப்பற்ற பல பா லி ய ல் தொ டர்புகளை முன்னெடுத்துள்ளமை,

தெரியவந்துள்ளது என சுகாதார அமைச்சின் பா லி ய ல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பிள்ளைகள் இணையத்தளங்களை பயன்படுத்துவது குறித்து பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இலங்கையில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பிள்ளை பேறுக்காக வைத்தியசாலைகளுக்கு வரும் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் எச்.ஐ.வி. ப ரிசோத னைகள் அனைத்து வைத்தியசாலைகளிலும் நடத்தப்படுகின்றன.

ப ரிசோத னைகளின் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டால், பிள்ளை பெற்றெடுப்பதற்கு முன்னரும், பின்னரும் சிகிச்சைகள் வழங்கப்படும்.

தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி. தொற்றுவதை ஒழித்த நாடாக கடந்த 2019 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இலங்கையில் 3 ஆயிரத்து 600 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இருக்கின்றனர். 2004 ஆம் ஆண்டு முதல் சிகிச்சை நிலையங்களுக்கு வந்து ஆயிரத்து 845 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.