வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். பிரபல நடிகரும் நடிகையுமான விஜயகுமார் மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகளான இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்னர் தனக்கென ஒரு யூடியூப் சேனலை உருவாக்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இவரின் யூடியூப் சேனலுக்கு பெரிதும் உதவி வரும் பீட்டர் பால் என்ற இயக்குனரை இன்று காதல் திருமணம் செய்து கொண்டார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
இவருடைய திருமணம் கிறிஸ்தவ முறைப்படி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.