சிதறிய 4 பேர் கொண்ட அழகான குடும்பம் : 23 நாட்களுக்குள் ஒவ்வொருவராக உயிரிழந்த சோகம்!!

1086

இந்தியாவில்..

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் சோக பின்னணி வெளியாகியுள்ளது.

தெலங்கானாவை சேர்ந்தவர் அகோஜு கிருஷ்ணமூர்த்தி (42). இவர் நகைக்கடை நடத்தி வந்த நிலையில் தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து ரூ.30 லட்சம் கடன் வாங்கியிருந்தார், ஆனால் அவரால் கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை.

இதனால் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி கிருஷ்ணமூர்த்தி, அவர் மனைவி ஷைலஜா (35), மகள் காயத்ரி (13), மகன் அஸ்ரித் (15) ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தனர்.

இதையடுத்து சுயநினைவின்றி கிடந்த நால்வரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒவ்வொருவராக இறக்க தொடங்கினர்.

அதன்படி கிருஷ்ணமூர்த்தி ஆகஸ்ட் 24ஆம் திகதியும், காயத்ரி செப்டம்பர் 5ஆம் திகதியும், அஸ்ரித் செப்டம்பர் 13ஆம் திகதியும் உயிரிழந்தார். இந்நிலையில் ஷைலஜா நேற்று உயிரிழந்தார்.

கடன் தொல்லையால் மொத்த குடும்பமும் உயிரிழந்துள்ளது கிருஷ்ணமூர்த்தி வசித்த பகுதியில் வாழும் மக்களை பலத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.