செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்த அஜித்! ஓட்டு போட வந்த இடத்தில் பரபரப்பு.. வைரல் வீடியோ காட்சி!!

72

அஜித்குமார்……….

வாக்குச்சாவடி உள்ளே வந்தும் செல்பி எடுக்க முயற்சி செய்த ரசிகரின் செல்போனை நடிகர் அஜித்குமார் கோபத்துடன் பறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன்னர் தொடங்கியது. இதையடுத்து சென்னை திருவான்மயூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினியுடன் வாக்களிக்க வந்தார்.

அப்போது ரசிகர்கள் பலர் நடிகர் அஜித்துடன் புகைப்படம் எடுக்க முண்டியத்தனர். ரசிகர் ஒருவர் அஜித்துடன் செல்பி எடுக்க முயன்றார். இதனால் எரிச்சலடைந்த நடிகர் அஜித் அவரின் செல்போனை கோபமாக பறித்தார்.

பின் தன்னை சுற்றி இருந்த ரசிகர்களை அங்கிருந்து கிளம்புங்கள் என்று சைகையால் சொன்னார். இதை தொடர்ந்து ரசிகர்களிடமிருந்து அஜித்தை பாதுகாப்பாக வாக்கு சாவடிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

பின்னர் அஜித் அந்த செல்போனை உரியவரிடம் திருப்பி கொடுத்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.