தமன்னா..
பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பக்கம் வந்த பல நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். தமிழில் கல்லூரி என்கிற படம் மூலம் நடிக்க துவங்கினார். அப்படியே வியாபாரி உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். ஒருபக்கம் தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடிக்க துவங்கினார்.
அங்கு இளம் ஹீரோக்களுடன் நடிக்க துவங்கி அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். தமிழிலும் பிரபலமாகி சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, விஷால், விஜய், அஜித் என பலருடனும் நடித்து கோலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்டார். ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் மூலம் பேன் இண்டியா அளவில் பிரபலமானார்.
அப்படத்திற்கு பின் அது போன்ற வேடம் அவருக்கு கிடைக்கவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார். ஒருபக்கம் ஹிந்தி சினிமாவில் நடிக்க முயற்சிகள் செய்து வருகிறார். ஜெயிலர் படம் மூலம் ரஜினியுடனும் நடித்துவிட்டார். இந்த படத்தில் அவர் ஆடியா காவாலா பாடல் இப்படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. இந்த பாடலில் தமன்னா போட்ட ஆட்டம் ரசிகர்களை சூடேத்தியது.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
ஒருபக்கம், ஹிந்தி வெப் சிரீயஸ்களில் படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், இறுக்கமான உடையில் கட்டழகை காட்டி தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.