திடீரென உயிரிழந்த தந்தை… துக்கம் தாங்க முடியாமல் 30வது நாளில் மனைவி – மகன் தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்!!

928

விருதுநகர்…

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், சிதம்பரம் நகரில் வசித்து வருபவர் சிதம்பரம். இவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஆவார்.

இவரின் மனைவி சுபா. இந்த தம்பதிகளுக்கு முரளிராஜ் பாரதி என்ற மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். மகள்கள் திருமணம் முடிந்து தங்களது குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

முரளிராஜ் படித்துமுடித்துவிட்டு வேலையை தேடி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதத்தில் சிதம்பரம் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். சிதம்பரம் உயிரிழந்த துக்கத்தில் கடந்த ஒரு மாத காலமாக தாய் மற்றும் மகன் மிகவும் சோகத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவரது மனைவி சுபா மற்றும் மகன் முரளி பாரதி கணவரின் 30வது நாள் நினைவு தினத்தை அனுசரித்துவிட்டு துக்கம் தாங்க முடியாமல் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

அக்கம்பக்கத்தினர் கதவு திறந்து நிலையில், இருவரும் வீழ்ந்து கிடந்ததை கண்டு சாத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தாய் மகன் இருவரும் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என தனித்தனியே கடிதம் எழுதியுள்ளதை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.