திருமணத்தை மறந்து மதுபோதையில் உறங்கிய மணமகன்.. குடும்பத்தை சிறைபிடித்த மணமகள் உறவினர்கள்.. நடந்த விபரீதம்!!

283

பீகார்..

காரில் மணமகன் ஒருவர் மதுபோதையில் திருமணத்தை மறந்துவிட்டு உறங்கிய நிலையில், கோபத்தில் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரின் சுல்தாங்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த மணமகன் ஒருவர், திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு மது அருந்திவிட்டு அடுத்த நாள் நடைபெற இருந்த திருமணத்திற்கு செல்லாமல் போதையில் படுத்து உறங்கியுள்ளார்.

பின்னர் அடுத்த நாள் சுயநினைவு திரும்பி மணமகன் வீட்டிற்கு வந்த போது, மணமகள் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். தனது சொந்த பொறுப்புகளை கூட உணராத ஒரு மனிதனுடன் தனது வாழ்க்கையை நடத்த முடியாது என்று மணமகள் தெரிவித்துள்ளார்.

மேலும் திருமணத்திற்கு செலவழித்த பணத்தை உடனடியாக திருப்பி தரும்படி மணமகன் வீட்டாரிடம் பெண் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர்.

இதற்கிடையில் திருமணத்திற்கு மணமகன் உரிய நேரத்தில் வரவில்லை என்றதும், மணமகளின் குடும்பத்தினர் மணமகனின் உறவினர்களை சிறைப்பிடித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.