தேங்காய் எண்ணெய் சாப்பிட்டால் கல்லீரலுக்கு பாதிப்பை உண்டாக்குமா?

242

தேங்காய் எண்ணெய்…

அன்றாடம் சமையலுக்கு பயன்படும் ஒரு முக்கிய பொருள் தான் தேங்காய் எண்ணெய். சமையலில் சேர்த்துக்கொள்வதிலும், வெளிப்புறமாகத் தோலில் பூசுவதாலும் பல பலன்கள் இருக்கின்றன.

உடலுக்கு நலம் தருவதோடு, சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது தேங்காய் எண்ணெய்க்கு உள்ளது. இருப்பினும் இதனை அளவோடு எடுத்து கொள்வது நல்லது.

ஏனெனில் அதிகமாக எண்ணெய் எடுத்துகொள்வது சில நேரங்களில் எதிர்பாராத பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று கூறப்படுகின்றது. எனவே அவற்றின் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்வது நல்லதாகும்.

தற்போது தேங்காயெண்ணெயால் உண்டாகும் பக்கவிளைவுகள் குறித்து அறிந்துகொள்வோம்.

  • கொழுப்பின் அளவை உயர்த்தலாம். நிறைவுற்ற கொழுப்பு மொத்த கொழுப்பின் அளவையும் எல்.டி. எல் (மோசமான கொழுப்பு) அளவை உயர்த்தும். இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். அதிக நிறைவுற்ற கொழுப்பு உள்ளடக்கம் உள்ள உணவுகளில் தேங்காய் எண்ணெய் உள்ளது.
  • தேங்காயெண்ணெய் ஒவ்வாமை ஏற்படுவதாக இருந்தால் உணவு எடுத்துகொள்ளும் போது அதை கவனித்து சுகாதார நிபுணர்களை சந்திப்பது நல்லது.
  • தேங்காயெண்ணெய் விரைவான இதயத்துடிப்பு, முக வீக்கம் மற்றும் இலேசான தலைவலியை உண்டாக்கும்.
  • தேங்காய் எண்ணெய் இதய நோய் அபாயத்தை உண்டாக்கும். ஏனெனில் தேங்காய் எண்ணெய் நிறைவுற்ற கொழுப்புகளில் அதிகமாக உள்ளது.
  • தேங்காய் எண்ணெய் எடுக்கும் போது லேசான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும்.
  • தேங்காய் எண்ணெயில் உள்ள நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள் கல்லீரலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நடுத்தர சங்கிலிகள் கல்லீரலுக்கு வரும் போது அதன் வேகம் ஒரு சிக்கலை உண்டாக்கும். இது கல்லீரலுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தகூடும்.
  • குழந்தைகளுக்கு நல்லது என்றாலும் தேங்காயெண்ணெய் பயன்படுத்தும் போது குழந்தைக்கு ஹைப்போ தைராய்டிசம் இருந்தால் மருத்துவரை அணுகுவதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் அது தொடர்புடைய தயாரிப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • தேங்கயெண்ணெயை தனிப்பட்ட மசகு எண்ணெயாக பயன்படுத்த கூடாது. இது யோனியின் பிஹெச் அளவை மாற்றும் இதனால் ஈஸ்ட் தொற்று உண்டாகிறது.