ஷூட்டிங் ஸ்பாட் என்றாலும் சரி பொது நிகழ்ச்சிகள் என்றாலும் சரி நடிகர்களை ரசிகர்களின் கூட்டத்தில் சிக்காமல் பாதுகாப்பாக அழைத்துச் செல்பவர்கள் பாடி காட்ஸ்.
அதில் விஜய், சூர்யா, மோகன்லால், பிரித்விராஜ், பவன் கல்யாண் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு பாதுகாவலராக இருந்தவர்களில் ஒருவர் தாஸ்.
பல முன்னணி நடிகர்களுக்கு பக்கபலமாக இருந்து, சிறந்த பாதுகாவலராக பணிபுரிந்த தாஸ், மஞ்சள் காமாலை காரணமாக பிரபல மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
ஆனால், எந்தவித மருத்துவ சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார் தாஸ். தற்போது இந்த செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் நடிகர் பிரித்விராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.