நள்ளிரவில் சிக்கன் கிரேவி சாப்பிட்ட தாய் மற்றும் மகள் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

378

தூத்துக்குடி…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்தனர்.

 

தங்கப்ப நகரைச் சேர்ந்த இளங்கோவன் மனைவி கற்பகம் மற்றும் மகள் தர்ஷினி ஆகியோர் நேற்றிரவு அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

 

அப்போது அவர்களுக்கு லேசான வயிற்றெரிச்சல் ஏற்படவே அருகில் உள்ள கடையில் இருந்து 10 ரூபாய் மதிப்புள்ள குளிர்பானத்தினை வாங்கி குடித்துள்ளனர்.

 

சிறிது நேரத்தில் இருவரும் வாந்தி எடுத்த நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.