நைட் டியூட்டி முடித்துவிட்டு தனியாக வந்த இளம் பெண் : ரயில் நிலையம் பின்னால் அரங்கேறிய கொடூரம்!!

116

ஆந்திர மாநிலம்….

இரவு பணி முடித்து விட்டு தனிமையில் நடந்து வந்த பெண்ணை இருவர் ரயில் நிலையத்தின் பின்புறம் வைத்து கதற கதற பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இக்கொடூரம் அரங்கேறியுள்ளது.

நாடு முழுவதும் 75வது பவள விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆசாதிகா அமிர்த மஹோத்சவ் என்ற பெயரில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இரவு பணியை முடித்துவிட்டு பெண்ணொருவர் தனியாக நடந்து சென்ற போது இளைஞர்கள் அந்தப் பெண்ணை தூக்கிச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

முழு விவரம் பின்வருமாறு:- ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் மையப்பகுதியான மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சமீபத்தில் இரவு பணி முடித்துவிட்டு நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 2 இளைஞர்கள் அவரை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.

அப்போது அந்தப் பெண்ணிடம் நாங்கள் போலீஸ் நீங்கள் எங்கே போக வேண்டும், நள்ளிரவில் ஏன் தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் தயவுசெய்து எங்களுடன் வாருங்கள் நாங்கள் உங்களை வீட்டில் இறக்கி விடுகிறோம் எனக்கூறி அந்தப் பெண்ணை இருசக்கர வாகனத்தில் ஏற கூறினர்.

ஆனால் அந்த பெண் அதற்கு மறுத்தார், அப்போது வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணை அவர்கள் இரு சக்கர வாகனத்தில் ஏற்றினார் பின்னர் சிலகளபுடி ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்று ரயில் நிலையத்தில் பின்புறத்தில் உள்ள காலி இடத்தில் வைத்து அந்தப்பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அதை தங்களது செல்போனில் அவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர்.

நடந்ததை யாரிடமாவது கூறினால் நிர்வாண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டினர். பின்னர் ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த பெண் வீட்டுக்கு திரும்பினார்.

ஆனால் தனக்கு நடந்த கொடுமையை எண்ணி எண்ணி அந்த பெண் கதறினார், பின்னர் மறுநாள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் வீட்டுக்கு வெளியில் நடந்து செல்வதை கண்டார், உடனடியாக பெற்றோரிடம் அதை கூறினார், பின்னர் அவர்கள் அந்த இளைஞரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

அந்த இளைஞர் சுகர்லாபத்தை சேர்ந்த நாராயணா என்பது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே பல பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இரண்டாவது நபரையும் கைது செய்ய வேண்டுமென அந்த பெண் போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்போது அந்த இளைஞன் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தான் மட்டும் தான் என கூறியுள்ளார். அந்த இளைஞனிடம் இருந்த செல்போனை பறித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.