பச்சையாக மீனை சாப்பிட்டதால் வைரலான இலங்கை அமைச்சர்!!

63

திலீப்………..

மீன்பிடித்துறையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி ,மக்கள் மீன்களை கொள்வனவு செய்யாத காரணத்தினால் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக கூறியதுடன் பச்சையாக மீனை உண்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மீன்களில் கொரோனா வைரஸ் இல்லை என்று கூறிய அவர் அதனை உறுதிப்படுத்தும்வகையில் செய்தியாளர்களின் முன்னிலையில் மீனை பச்சையாக சாப்பிட்டுக் காட்டினார்.

இந்நிலையில் குறித்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.