பல்கலைக்கழகத்தின் கழிவறைக்கு சென்ற மாணவிகளுக்கு காத்திருந்த ஒரு பெரிய அதிர்ச்சி!!

184

இந்தியா….

இந்தியாவில் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத வந்த மாணவி கழிவறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் ப்ரியங்கா குமாரி (21). கல்லூரி மாணவியான இவர் நேற்று காலை தேர்வு எழுத பல்கலைக்கழகத்துக்கு வந்தார். 10.30 மணிக்கு தேர்வை முடித்த அவர் அங்குள்ள கழிப்பறையை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.

மதியம் 12 மணியளவில் சில மாணவிகள் கழிவறைக்கு சென்ற போது அங்கு ப்ரியங்கா சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் பொலிசார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தற்போது வரை இது தற்கொலை என கூறப்பட்டாலும் இறப்புக்கான உண்மையான காரணம் வெளியாகவில்லை.

ப்ரியங்கா கூறித்து அவர் தந்தை கூறுகையில், காலையில் தேர்வு என்பதால் எதுவும் சாப்பிடாமல் அவள் கிளம்பி சென்றாள். வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை, எல்லாம் சாதாரணமாகவே சென்று கொண்டிருந்தது.

ப்ரியங்கா மரணம் எங்கள் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது என கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.