பிக்பாஸ் நமிதா வெளியேறியதற்கு இதுதான் காரணமா? தோழி கூறிய அதிர்ச்சி தகவல்!!

23

நமீதா…

பிக்பாஸ் 5 சீசன் ஆரம்பித்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் கடந்த வாரம் நடந்த டாஸ்கில் நமீதா மாரிமுத்து, தான் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து பேசியது காண்போரை கண்கலங்க வைத்தது.

இவ்வாறு முதல் வாரமே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நமீதா, இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறினார்.

அவர் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறியதாக கமல்ஹாசன் தெரிவித்தார். அவர் பிக்பாஸ் வீட்டில் தகராறு செய்ததால் ரெட் காட்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதாக தகவல் பரவி வந்தது.

அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் வெளியேற்றப்பட்டதாகவும் செய்திகள் வலம் வந்தன. இந்நிலையில், நமீதா வெளியேறியதற்கான உண்மை காரணம் வெளியாகி உள்ளது.

அவர் மருத்துவ காரணங்களுக்காக தாமாக வெளியேறியதாக அவரின் நெருங்கிய தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டில் தூக்கமின்றி இருந்ததால் குலுகோஸ் குறைந்து உடல் நிலையில் சில மாறுதல் ஏற்பட்டதாலும் தாமரை செல்வியிடம் ஏற்பட்ட சில மோதல்களால் ஏற்பட்ட மன அழுத்டம் காரணமாக வெளியேறியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகாததால் இணையத்தில் பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.