மகனின் ஆசைக்காக ரோலர் கோஸ்டரில் ஏறிய தாய் : அடுத்த சில நொடிகளில் நேர்ந்த சோகம்!!

91

டான் ஜான்கோவிக்…

மகனின் வற்புறுத்தல் காரணமாக ரோலர் கோஸ்டாரில் சென்ற தாய் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஓஹியோ (Ohio) மாகாணத்தை சேர்ந்த பெண்மணி டான் ஜான்கோவிக் (Dawn Jankovic) 47.

இவர் அங்குள்ள இண்டியானா (Indiana) மாகாணத்தில் இருக்கும் சாண்டா கிளாஸ் ஹாலிடே வேர்ல்ட் & ஸ்பிளாஷின் சஃபாரி தீம் பார்க்குக்கு தனது 17 வயது மகன் குன்னர் மேர்க்கருடன் (Gunnar Merker) வருகை தந்துள்ளார்.

இதையடுத்து, டான் ஜான்கோவிக்கு ரோலர் கோஸ்டாரில் செல்ல மிகுந்த ஆர்வமாக இருந்தாலும், சம்பவ தினத்தன்று ஏனோ பயமாக இருந்துள்ளது. அவரது 17 வயது மகனின் வற்புறுத்தல் காரணமாக ரோலர் கோஸ்டாரில் செல்ல சம்மதம் தெரிவித்து பயணம் செய்துள்ளார்..

அதன்பின்னர், அவர் ரோலர் கோஸ்டர் பயணத்தின் போதே பயத்தில் அவரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரோலர் கோஸ்டாரின் இறுதி இடத்திற்கு வந்த அவர் கீழே இறங்கியதும் மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யவே, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் உள் இரத்தப்போக்கு, தமனி கிழிதல் போன்ற காரணத்தால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக குடும்பத்தினர் தெரிவிக்கையில், டான் ஜான்கோவிக் எப்போதும் ரோலர் கோஸ்டாரில் செல்ல ஆர்வமாக இருப்பார்.

இன்று ஏனோ மறுப்பு தெரிவித்தார். அவரது மகன் வற்புறுத்தி அவரை ரோலர் கோஸ்டர் பயணத்திற்கு அழைத்து சென்ற நிலையில், அதுவே அவரின் இறுதி பயணமாகியுள்ளது என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்,.