மகனுடன் சேர்ந்து கணவனை போட்டுத் தள்ளிய மனைவி : இதுதான் காரணமா?

183

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டத்தில் உறவினர்களுடன் சேர்ந்து கணவனை மனைவி அடித்துக் கொலை செய்து விட்டு அந்த பழியை மகன் மீது சுமத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சத்திரப்பட்டி முல்லை நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஓமந்தூரார். இவர் கேரளாவில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பாண்டீஸ்வரி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ஓமந்தூரானுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதை பார்த்த அவரது 15 வயது மகன் வேதனையடைந்து இது குறித்து தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஓமந்தூரான் குடித்து விட்டு மனைவி மற்றும் மகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் மனைவி பெயரில் இருக்கும் வீட்டை தன் பெயருக்கு மாற்றித் தருமாறு கேட்டு மிரட்டி இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி ஓமந்தூரான் மீண்டம் மது குடித்து விட்டு தகராறு செய்ததால், அவரது மகன் ஆத்திரமடைந்துள்ளார். வீட்டில் இருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து ஓமந்தூரானின் தலையில் தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கிரிக்கெட் பேட்டுடன் போலீஸ் நிலையம் சென்ற சிறுவன் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் ஓமந்தூரானின் மரணத்தில் வேறு சிலருக்கும் சம்பந்தம் இருப்பதாக சந்தேகப்பட்ட அவரது தந்தை ராமசாமி போலீசில் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து மறு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், ஓமந்தூரான் மனைவி பாண்டீஸ்வரி, அவரது உறவினர் கிருஷ்ணவேணி, லட்சுமி, ராமையா ஆகிய நான்கு 4 பேர் கூடுதலாக சிக்கி இருக்கிறார்கள். கூட்டு சதி செய்து ஓமந்தூரானை கொலை செய்த இவர்கள், 15 வயதே ஆன ஓமந்தூரானின் மகனிடம் பழியை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுள்ளனர்.

மைனர் என்பதால் அவருக்கு தண்டனை குறைவு என்றும், மீதி 4 பேரும் தப்பித்துக் கொள்ளலாம் என்றும் திட்டமிட்டுள்ளனர். மகனின் கல்வியையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளாத பாண்டீஸ்வரி இந்த திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

தற்போது சிறுவன் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரது தாய் உள்ளிட்ட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.