மனைவி இளைஞனுடன் உல்லாசம்… திடீரென வந்த கணவன்.. நடந்த விபரீதம்!!

28019

கிருஷ்ணகிரி…

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அடுத்துள்ள என். தட்டக்கல்லை சேர்ந்தவர் கந்தன். இவருக்கு 35 வயதாயாகிறது. கந்தனும் சந்தியா (27) என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கந்தன் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். மனைவி, பிள்ளைகள் என இருவரது வாழ்க்கை நல்லாத்தான் சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில், மிடுக்கான வாலிபருடன் ஏற்பட்ட பழக்கம் சந்தியாவின் மதியை மறைத்தது. காதல் கணவன், பிள்ளைகளை கூட மறந்து அத பகுதியை சேர்ந்த சிவசக்தி என்ற இளைஞருடன் சந்தியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

கணவன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு பகல், இரவு என நேரம் பார்க்காமல் சென்று விடுவதால் தனிமையில் அதிகமாக இருந்து வந்த சந்தியா சிவசக்தி போட்ட தூண்டில் எளிதாக சிக்கிக்கொண்டார். இருவரும் கள்ளக்காதலில் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். பின்னர் அது கட்டில் வரைக்கும் சென்றுள்ளது.

கணவன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டால் சந்தியாவின் வீட்டுக்குள்ளேயே இருவரும் உல்லாசமாக இருப்பது வழக்கம். ஒரு கட்டத்தில் சந்தியா மீது சந்தேகமடைந்த கணவன் அவரது செல்போனை வாங்கி பார்த்தபோது, சந்தியாவும், சிவசக்தியும் அடிக்கடி பேசிக்கொள்வதை கண்டுபிடித்தார்.

அப்போதே மனைவியை கண்டித்து இனி அவனுடன் பேசுவதை, புகுவதை நிறுத்திக்கொள் என அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும், சந்தியா கள்ளக்காதலை விடவில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடந்த ஆட்டோவை எடுத்துக்கொண்டு வெளியில் புறப்பட்டார்.

பின்னர் இரவு 11 மணிக்கு திரும்ப வரும் வரை சந்தியாவும், சிவசக்தியும் தனிமையில் இருந்துள்ளனர். வீட்டுக்குள் நுழைந்த கந்தன் மனைவி கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்து அதிர்ந்துபோனார்.

மேலும், ஆவேசமடைந்த அவர் இருவரையும் கண்டிக்க முற்பட்டபோது சுதாரித்துக்கொண்ட சந்தியாவும், கள்ளகாதலனும் சேர்ந்து மிளகாய்பொடியை தூவி கந்தனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

அதனை அடுத்து கணவன் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளதாக கூறி சிவசக்தியின் நண்பனை வரவழைத்து கந்தனை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கந்தன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், வயிற்றில் கத்தி குத்து இருந்ததால் இது குறித்து தகவல் அறிந்து வந்த நாகரசம்பட்டி போலீசார் கந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அதில் சந்தியாவின் கள்ளக்காதல் பின்னணி தெரிய வர சந்தியா மற்றும் சிவசக்தி இருவரையும் கைது செய்துள்ளனர். தாயின் கள்ளகாதலால் தந்தையும் பலியாகி தாயும் சிறைக்கு சென்று பிள்ளைகள் இரண்டும் அனாதையாக்கப்பட்டுள்ளனர்.