விமானப்படையில் முதல் தடவையாக இணைத்துக்கொள்ளப்பட்ட பெண் விமானிகள் : ஜனாதிபதி வாழ்த்து!!

72

பெண் விமானிகள்..

இலங்கை விமானப்படையில் முதல் தடவையாக இரண்டு பெண்கள் விமானி பயிற்சிகளை பூர்த்தி செய்து விமானிகளாக படையில் இணைந்து கொண்டுள்ளனர்.

இந்த இரண்டு பெண் விமானிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் டுவிட் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏ.டி.பி.எல் குணரட்ன மற்றும் ஆர்.ரீ. வீரவர்தன ஆகிய பெண்களே இவ்வாறு இலங்கை விமானப்படையில் முதல் பெண் விமானிகளாக தெரிவாகியுள்ளனர்.

குறித்த இரண்டு பெண் விமானிகளினதும் இந்த அடைவு ஏனைய பல பெண்கள் தங்களது கனவுகளை மெய்ப்பித்துக் கொள்வதற்கு உந்து சக்தியாக அமையும் என தாம் கருதுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.