விமான நிலைய ஊழியர்கள் பலர் வேலையிழப்பை சந்திக்க நேரும்..!

787

விமான நிலைய ஊழியகள் பலர் வேலையிழப்பை சந்திக்க நேரும் என Aéroports de Paris நிர்வாக இயக்குனர் எச்சரித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த Aéroports de Paris நிர்வாக இயக்குனர் Augustin de Romanet இதனை தெரிவித்தார். கொவிட் 19 வைரஸ் காரணமாக விமான சேவைகள் பாரியளவில் வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. `புதிய சூழ்நிலைக்கு ஏற்ப எமது நிறுவனம் மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் விடயத்தில் நாம் “மாற்றங்கள்“ கொண்டுவருவோம்` என குறிப்பிட்டார்.

ஆனால் நேரடியாக அவர் வேலை இழப்பு குறித்தோ, அல்லது பணிநீக்கம் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறித்தோ தகவல் தெரிவிக்கவில்லை.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

ஆனால் தமது வருவாயில் 50% வீதத்தினை தாம் இழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் இருந்து மீண்டு வர தமக்கு கணிசமான மாதங்கள் வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.