விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

1530

சென்னையில்..

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மகள் 15 வயது அபிநந்தனா. இவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கூடைப்பந்து விளையாட்டில் சாம்பியனாக திகழ்ந்து வருகிறார்.

இவர் கூடைப்பந்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கூடைப்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் மாவட்டம் சென்றிருந்தார். போட்டியில் கலந்து விட்டு விருதுநகரில் இருந்து புறப்பட்டு மதுரை ரயில் நிலையத்திற்கு மாணவி தனது சக நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் வந்துள்ளார்.

அப்போது, அபிநந்தனா திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

அபிநந்தனாவின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

உயிரிழப்புக்கான காரணம் குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தான் தெரிய வரும். விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவி ஊர் திரும்பும் வழியில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here