விவசாயியா இருந்து யூடியூபரா மாறி சாதிச்ச 62 வயசு பாட்டி.. விமானத்தில் ஃபர்ஸ்ட் டைம் போன ட்ரெண்டிங் வீடியோ!!

981

தெலுங்கானா…

தெலுங்கானா மாநிலத்தில் விவசாயியாக இருந்து பிரபல யூடியூபராக மாறி கலக்கி வருபவர் மில்குரி கங்கவ்வா என்ற பெண்மணி. முன்னதாக விவசாய தொழிலாளியாக இருந்த இவர், யூடியூபில் கிராம பாங்கான வீடியோக்களை கலகலப்பாக வெளியிட்டு மக்கள் மனதில் பிரபலமாகவும் செய்திருந்தார்.

மேலும் தனக்கு கிடைத்த பிரபலம் காரணமாக தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கடந்த 2020 ஆம் ஆண்டு போட்டியாளராக களமிறங்கி இருந்தார். 62 வயதாகும் மில்குரி கங்கவ்வா, தனது youtube பக்கத்தில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு,

மக்கள் மத்தியில் தொடர்ந்து புகழ் பெற்று வரும் நிலையில், தனது நீண்ட நாள் கனவு ஒன்றை சமீபத்தில் நிறைவேற்றியது தொடர்பான வீடியோ தான் இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

நீண்ட நாளாக விமானத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என மில்குரி கங்கவ்வாவிற்கு ஆசை இருந்துள்ளது. அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் தனது கனவையும் நிறைவேற்றியுள்ளார்.

62 வயதில் விமான பயணம் மேற்கொண்டுள்ள மில்குரி கங்கவ்வாவின் வீடியோ, தற்போது ட்ரெண்டிங் லிஸ்ட்டிலும் இடம் பிடித்துள்ளது. விமான பயணத்தின் போது சில இடங்களில் பயப்படவும், தயக்கம் காட்டியும் இருந்த மில்குரி கங்கவ்வா,

மிகவும் இயல்பாக முதல் முறை விமான பயணம் செய்யும் ஒருவர் எப்படி இயங்குவாரோ அதை அப்படியே பிரதிபலிக்கவும் செய்கிறார். டேக்-ஆஃப் செய்த போது சற்று பயம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடும் மில்குரி கங்கவ்வா தனது முதல் விமான அனுபவம் பற்றியும் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Milkuri Gangavva (@gangavva)