அமெரிக்காவில் உயர் விருது வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண்!! முழு விபரம் உள்ளே !!

786

ரனிதா ஞானராஜா..

இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் அமெரிக்காவில் அதி உயர் விருது வென்றுள்ளார். தைரியமான சர்வதேச பெண் என்ற விருது சட்டத்தரணியான ரனிதா ஞானராஜா என்ற இலங்கைப் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. அரச அ.ச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது நாட்டில் ஒடுக்கப்பட்ட, பா.திக்கப்பட்ட சமூகங்களுக்காக குரல் கொடுத்து வந்தார்.

வலிந்து கா.ணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்பு கூறல்களை உறுதி செய்யவும், ப.யங்கரவாத த.டைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்காகவும் ரனிதா குரல் கொடுத்து வருகின்றார்.


போர் காரணமாக தனிப்பட்ட ரீதியில் பா.திக்கப்பட்ட நபர் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர் குரல் கொடுத்து வருகின்றார்.

உலகின் தைரியமான பெண்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது. அமெரிக்க முதல் பெண்மணி டொக்டர் ஜில் பெய்டன் இந்த நிகழ்வில் உரையாற்ற உள்ளார்.

இணைய வழி மெய்நிகர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த நிகழ்வு நடாத்தப்பட உள்ளதுடன், இந்த நிகழ்விற்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் அந்தனி பிலிங்கன் தலைமை தாங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.