எட்டு பேரை மணந்த இளம்பெண் : 9வது திருமணத்திற்கு தயாரான போது தெரிந்த அதிர்ச்சி உண்மை!!

916

தமிழகத்தின்..

தமிழகத்தின் கரூரில் வசித்து வருபவர் சௌமியா என்ற சபரி (28). இவர், மின்சாரத் துறை அமைச்சர் தனது உறவினர் என்று பொய்சொல்லி கரூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பல லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே 8 பேரை செளமியா மணந்துள்ளார். தற்போது வசிக்கும் வீட்டருகில் இருப்பவர்களிடம் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், மறுமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறினார்.

இதனை நம்பிய பக்கத்து வீட்டு பெண் ஒருவர் தனது உறவினரான ஆட்டோ ஓட்டுனர் சிவக்குமாருக்கு சௌமியாவை மணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார். தாம் ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவதாக சிவக்குமாரிடம் கூறிய சௌமியா தமக்கு அமைச்சரை தெரியும் என்றும்,

அவர் மூலம் சிவக்குமாருக்கு வேலை வாங்கித் தருவதாகவும் முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார். பின்னர் திருமண வேலைகள் நடந்த நிலையில் சிவக்குமாருக்கு இது தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பலரிடம் விசாரித்த போது செளமியாவின் குட்டு வெளியானது.

இதையடுத்து, சிவக்குமார் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சௌமியா தங்கி இருக்கும் வீட்டினுள் சென்று அவரை குண்டுகட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் சௌமியாவை கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.