ஒரு நொடியில் உ யி ரை ப றி க்கும் இதய நோயை நெருங்க விடாமல் தடுக்கும் உணவுகள்!!

369

இதய நோய்………….

இதய கோளாறால் பலர் உ யி ரை விடுவது இந்த நவீன சமூகத்தின் அவலம். இதய நோய் ஏற்பட மிக முக்கிய காரணியாக உணவு காரணப்படுகின்றது.

ஆரோக்கியமான உணவுகளினால் இதயத்தை பாதுகாக்க முடியும் என்று ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய உணவுகள்

வெள்ளை சால்மன் மீன்


வெள்ளை சால்மன் மீனில் இருக்கும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இதய தசைகளுக்கு வலு கொடுக்கும். செலினியம் அதிகம் இருப்பதால் அவை இதய வால்வுகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

ஈரல்

ஈரல் அதிக கொழுப்பை கொண்டுள்ளது. ஆனால் அவை மிகவும் ஆரோக்கியமான கொழுப்புக்களே. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்காது. இதயத்தில் படியும் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. ஆகவே தாராளமாக நீங்கள் ஈரலை எடுத்துக் கொள்ளலாம்.

வால் நட்

வால் நட்டிலும் ஒமேகா அமிலங்கள், விட்டமின் ஈ, நார்ச்சத்து ஆகியவை உள்ளது. தினமும் வால் நட்டை சாப்பிடுங்கள். இதயம் 100 வயது வரை ஆரோக்கியமாக இருக்கும்.

பாதாம்

பாதாமை ஊற வைத்து சாப்பிடுதல் இதய நோய் மட்டுமல்ல, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் தடுக்கிறது.

பழங்கள்
ஆப்பிள் ஆரஞ்சு, பெர்ரி பழங்கள் போன்றவற்றிலுள்ள நார்சத்துக்கள் இதய தசை நார்களுக்கு மிகவும் வலுவை தருகின்றன. ஆகவே வாரம் தவறாமல் அவற்றை சாப்பிடுங்கள்.

ஓட்ஸ்

ஓட்ஸ் கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவு. நல்லதும் கூட. சமைக்கும் நேரமும் மிகக் குறைவு. காலை நேர சாப்பிட வேண்டிய சூப்பர் உணவுகளில்,ஓட்ஸும் உண்டு. என்வே ஸ்லிம்மாக இருக்கவும், இதய நோய்கள், கொலஸ்ட்ரால் வராமல் தடுக்கவும் தினமும் ஓட்ஸ் சாப்பிடுங்கள்.

உலர் திராட்சைகள்

உலர் திராட்சைகள் சுவை மட்டுமல்ல அற்புதமான சத்துக்கள் பெற்றவை. இவைகள் அதிக பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் அதிகமாகும் சோடியத்தை குறைக்கின்றது. இதனால் ரத்த அழுத்தம், இதய நோய்களை வரவிடாமல் தடுக்கலாம்.

எண்ணெய்
ஆலிவ் எண்ணெய், அவகாடோ எண்ணெய் ஆகியவை பாதுகாப்பான எண்ணெய்கள். இவைகளில் இருக்கும் பாலி அன்சாச்சுரேட்டெட் கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பை கல்லீரலுக்கு அனுப்புகின்றன. இருப்பினும் எந்த எண்ணெயாக இருந்தாலும் அளவாகவே பயன்படுத்துதல் நல்லது.

சிவப்பு பீன்ஸ்

கடைகளில் விற்கும் சிவப்பு பீன்ஸ் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதனை வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டால் உங்களுக்கு இதய நோய்கள் கிட்ட நெருங்காது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.