கர்ப்பமாகாத 5 பெண்களுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி… அம்பலமான மோசடி : தலைசுற்றவைக்கும் சம்பவம்!!

1106

சாத்தான்குளம்…

தமிழகத்தில் கர்ப்பமாகாத அங்கன்வாடி ஊழியர்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சாத்தான்குளம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அங்கன்வாடி மையத்திற்கு உட்பட்ட 40 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான உணவு, வளையல்கள், மாலை, பூ, மஞ்சள், குங்குமம் என அவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு போதிய கர்ப்பிணிகள் வராததால், அங்கன்வாடி ஊழியர்களாக பணியாற்றிய 5 பெண்களை கூட்டத்திற்குள் அமர வைத்து வளைகாப்பு நடத்தி உள்ளனர்.


அந்த 5 பேரும் தற்போது கர்ப்பமாக இல்லை என்ற போதும் இந்த கூத்தை அங்கிருந்த ஊழியர்கள் அரங்கேற்றி உள்ளனர்.  இந்த நிகழ்ச்சிக்காக ஒரு வட்டாரத்திற்கு அரசு சார்பில் உணவு வகைகக்காவும், வளையல்கள், மாலைகளுக்காகவும் 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

கர்ப்பமான பெண்களுக்கு மட்டுமே இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். இதனை மீறி கூடுதல் நிதி கிடைக்கும் என்ற ஆசையில் இந்த வேலையை பார்த்துள்ளனர்.

வளைகாப்பு என்ற பெயரில் நிதி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது, இது தொடர்பாக விசாரிக்கப்பட்டால் முழு பின்னணி வெளிவரும்.