தலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்! 1 மணிநேரத்தில் மாற்றம்…!

876

தலைமுடி……

தலைமுடி பிரச்சனைக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு கண்டால், பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும்.

தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் போன்ற சமையலறைப் பொருட்கள் மட்டுமின்றி, இஞ்சியும் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா?

அதற்கு இஞ்சியை தலைமுடி பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும். சரி, இப்போது தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண இஞ்சியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து காண்போம்.

தலைமுடி உதிர்வை நிறுத்த…
தலைமுடி அதிகம் உதிர்ந்தால், ஒரு இஞ்சி துண்டை நேரடியாக ஸ்கால்ப்பில் சிறிது நேரம் தேய்க்க வேண்டும். பின் 10-15 நிமிடம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், தலைமுடி உதிர்வது முற்றிலும் நின்றுவிடும்.


பொடுகுத் தொல்லை நீங்க…
இஞ்சி சாற்றில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, ஸ்கால்ப்பில் சுரக்கும் எண்ணெயின் அளவைக் குறைக்கும் மற்றும் ஸ்கால்ப்பில் தொற்றுகளால் பொடுகு வருவதைப் போக்கும். அதற்கு இஞ்சி சாற்றால் ஸ்கால்ப்பை மசாஜ் செய்து அலச வேண்டும்.

ஸ்கால்ப் காயங்களை சரிசெய்ய…
தலையில் பொடுகு இருக்கும் போது ஏற்படும் அரிப்பால், சிலருக்கு தலையில் காயங்களே ஏற்பட்டுவிடும். இன்னும் சிலருக்கு ஸ்கால்ப்பில் பருக்கள் வரும். இப்பிரச்சனைகளைப் போக்க இஞ்சி சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து அலசுங்கள்.

பொலிவான தலைமுடியைப் பெற…
இஞ்சி சாற்றில், சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலையில் தடவி குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்வதால், தலைமுடியின் பொலிவு அதிகரிக்கும்.

வறட்சியான முடிக்கு…
தலைமுடி மிகவும் வறண்டு உள்ளதா? அப்படியெனில் இஞ்சி சாற்றில் அர்கன் எண்ணெய் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் அதிகப்படியான வறட்சியால் மென்மையின்றி இருக்கும் தலைமுடி மென்மையாகும்.