பட்டதாரி இளம் பெண் உயிரிழந்த வழக்கில் திருப்பம் : சமூகவலைத்தளத்தால் வந்த வினை!!

176

சென்னை..

சென்னையில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

வளசரவாக்கத்தை சேர்ந்தவர் அரிதா ராஜேஸ்வரி (25) பட்டப்படிப்பு முடித்த இவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு மாணவர்களுக்கு டியூஷன் எடுத்த வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் அரிதா ராஜேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற வளசரவாக்கம் பொலிசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.


இதை அடுத்து வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தற்கொலை செய்து கொண்ட அரிதா ராஜேஸ்வரி செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், அரிதா ராஜேஷ்வரி சமூக வலை தளம் வாயிலாக மதுமோகன்(35), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

அரிதா ராஜேஷ்வரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகிய பின் மது மோகன், அரிதா ராஜேஷ்வரியை தொடர்பு கொள்ளாமலும் பேசுவதை நிறுத்தியும் வந்துள்ளார். மேலும் அரிதா ராஜேஷ்வரியின் செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அரிதா ராஜேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மது மோகனை பொலிசார் கைது செய்தனர், அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.