பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை வசியம் செய்யும் அபர்ணா தாஸ்!!

1890

அபர்ணா தாஸ்..

தற்பொழுது இருபத்தி ஏழு வயதாகும் நடிகை அபர்ணா தாஸ் கடந்த 2018-ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான ஞான் பிரகாசன் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு மனோகரம் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் அபர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது தமிழில் தாதா என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். மாடல் அழகியான இவர் கோவையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தன்னுடைய படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரியில் படிக்கும்பொழுதே மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வந்த இவர் சினிமா வாய்ப்புகளையும் பெற்றார்.

ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பீஸ்ட் திரைப்படத்தின் 2வது ஹீரோயின் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பல காட்சிகளில் நடித்திருந்தார். தொடர்ந்து படவாய்ப்புகள் முயற்சி செய்து வரும் இவர் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருபவர் பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்கிறார். தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புதிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.