பாயாசத்தால நின்று போன திருமணம்.. நிச்சயதார்த்த விழாவில் அடிதடி : வைரலாகும் வீடியோ!!

1299

மயிலாடுதுறையில்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், கோலாகலமாக திருமண மண்டபம் ஒன்று திருமண நிச்சயதார்த்த விழாவுக்காக தயாராகி கொண்டிருந்தது. மணமகன் வீட்டாரை வரவேற்பதற்காக மணமகள் வீட்டாரும் தடபுடலாக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். மணமகன்- மனமகள் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் என நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர். அப்போது அங்கு நிச்சயதார்த்த விழாவில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் தீவிரமாக இருந்தனர்.

விழாவுக்கு வந்திருந்த உறவினர்களுக்கு வடை, பாயசத்துடன் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டபத்தின் உள்ளே நிச்சயதார்த்த விழா மங்களகரமாக நடைபெற்று வந்த நிலையில், வெளியே மண்டபத்தின் நுழைவுவாயிலில் மணமகன் வீட்டார் மற்றும் பெண் வீட்டார் இருவரும் கடும் மோதலில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த சீர்காழி போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்தனர். மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை பிடித்தும் சென்றனர். இதனிடையே, மோதல் குறித்து போலீசார் விசாரணை செய்ததில், நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்களுக்கு நடந்த விருந்தில் பாயாசம் பரிமாறியுள்ளனர்.


அப்பொழுது பாயாசம் சுவையாக இல்லை என்றும் அதனைப் பெண் வீட்டார் தட்டி கேட்டு தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரமடைந்து சாம்பாரைப் பெண் வீட்டார் சிலர் மீது ஊற்றியதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் இருதரப்பினரும் கைகலப்பாகி கடும் மோதல் ஏற்பட்டது தெரிய வந்தது.

மண்டப வாசலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்து இருதரப்பையும் அனுப்பி வைத்தனர்.