ஜேர்மனி வரலாற்று புத்தகங்களை மாற்றி எழுத வைத்துள்ள ஒரு இந்திய பெண்ணின் சாதனை!!

992

ஜேர்மன் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவியான ஒரு இந்திய பெண், ஜேர்மனி வரலாற்று புத்தகங்களை மாற்றி எழுத வைத்துள்ளார்.

T20 கிரிக்கெட் வரலாற்றில், தொடர்ந்து நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி வரலாறு படைத்த முதல் பெண் Anuradha Doddaballapura என்று ஜேர்மன் மாணவர்கள் வருங்காலத்தில் புத்தகங்களில் படிக்கலாம்.

Anuradha (33), இந்தியாவில் கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர். ஒரு உயிரியலாளராக தனது முனைவர் பட்டத்திற்காக ஜேர்மனியின் பிராங்பர்ட்டுக்கு 2011ஆம் ஆண்டு வந்தார் Anuradha.

அப்போது, கால்பந்தை அதிகம் விரும்பும் ஒரு நாடு, தன்னை ஒரு கிரிக்கெட் கேப்டனாக மாற்றும் என நிச்சயம் அவர் எண்ணிப்பார்த்திருக்கமாட்டார்.


பொழுதுபோக்காக தொடங்கிய கிரிக்கெட், இந்த உயிரியலாளரின் வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தை கிரிக்கெட்டுக்காகவே அர்ப்பணிக்கச் செய்துள்ளதுடன்,

மற்றவர்கள் அவரை ஒரு பயிற்சியாளராக ஏற்றுக்கொள்ளவும் வைத்துள்ளது.

Anuradhaவின் அடுத்த இலக்கு, Euro Qualifiers for the T20 World Cup. அந்த போட்டிகளில் ஜேர்மனி ஸ்காட்லாந்து, நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து போன்ற அணிகளுடன் மோத உள்ளது.