மகனுக்கு பாரமாக இருக்க விரும்பல.. உருக்கமான கடிதம் எழுதிவிட்டு மருத்துவ தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு!!

1032

கேரளாவில்..

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் மலரம்பா பகுதியில் ராம் மனோகர் (70) – ஷோபா (68) என்ற மூத்த தம்பதி வசித்து வந்தனர். மருத்துவர்களான இவர்கள் இருவரும் சேர்ந்து, திருச்சூர் பகுதியில் கிளினிக் நடத்தி வந்தனர்.

மக்களிடம் எளிமையாக பழகும் தன்மை கொண்டவர்கள் என்பதால், இவர்கள் மருத்துவமனைக்கு அப்பகுதி மக்கள், ஏழை எளியவர்கள் அதிகம் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அண்மையில் இந்த கிளினிக்கை மூடிவிட்டு தம்பதி கோழிக்கோட்டில் உள்ள வீட்டில் குடியேறினர். இவர்களை மகள் அவ்வப்போது சென்று பார்த்து வந்துள்ளார்.

இந்த சூழலில், இவர்களின் வீடு நீண்டநேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், முதிய தம்பதியின் மகளுக்கு போன் செய்து தகவலை கூறியுள்ளனர்.


அதன்பேரில் அப்பெண் அங்கு சென்று பார்த்தபோது வீட்டில் ஒரு அறையில் மருத்துவத் தம்பதி இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டனர். ஆனால், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், முதிய தம்பதிகள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இருந்தனர். இதனால் தற்கொலையா? அல்லது கொலையா? என சந்தேகம் எழுந்தது. போலீசாரும் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் முதிய தம்பதிகளின் வீட்டில் இருந்து கடிதம் ஒன்றும் சிக்கியது. அதில், தங்கள் இருவருக்கும் வயோதிகத்தால் நோய் இருக்கின்றது.

மகள், மருமகன் நன்றாகவே கவனித்துக் கொண்டாலும் அவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை, என உருக்கமாக எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.