மாதவிடாய் என முதலிரவை தள்ளிபோட்ட மணப்பெண்.. உண்மை தெரிந்து அதிர்ந்துபோன மாப்பிள்ளை குடும்பம்!!

17008

மத்தியப் பிரதேசத்தில்..

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு குடும்பத்தார், திருமண ஏஜென்ட் மூலம் பெண் தேடி உள்ளனர். அந்த ஏஜென்ட் ஏராளமான பெண்களின் புகைப்படங்களை அந்த குடும்பத்தினருக்கு காட்டியுள்ளார்.

அதில் ஒரு பெண்ணை அதிகம் பிடித்துபோனதால் பெண்ணின் தரப்பில் பேசினர். அவர்களும் சம்மதம் தெரிவித்ததால் திருமணத்து ஏற்பாடு செய்தனர்.

பின்னர் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு மணமக்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மணப்பெண் தனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது.


எனவே 4 நாள்கள் முதலிரவு வேண்டாம் என்று கூறியுள்ளார். மணமகனுக்கு இது பெரும் கவலையை ஏற்படுத்தியது. எனினும் நிலைமையை உணர்ந்து தனிமையில் உறங்கச்சென்றார்.

இந்நிலையில், திருமணமான அந்த வாரமே மணப்பெண் திடீரென மாமியார் வீட்டில் இருந்து மாயமானார். அவருடன் சேர்த்து வீட்டில் இருந்த தங்க, வெள்ளி நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கமும் காணாமல்போனது.

இதனால் மாப்பிள்ளை வீட்டார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். சந்தகமடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த ஏஜென்டின் வீட்டிற்கு சென்றனர்.

வீட்டிற்குள் புகுந்த பார்த்தபோது மாப்பிள்ளை வீட்டாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அந்த மணப்பெண் ஏஜென்ட்டுடன் அவரது வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது தான் இந்த திருமணமே கொள்ளை அடிப்பதற்காக போடப்பட்ட நாடகம் எனத் தெரியவந்தது. அந்த பெண் விரும்பி திருமணம் செய்துகொள்ளவில்லை, கொள்ளை அடிக்கத்தான் இதை செய்துள்ளார்.

இதற்காகத் தான் தனக்கு மாதவிடாய் எனக் கூறி முதலிரவை தள்ளி வைத்து, சரியான நேரம் பார்த்து நோட்டமிட்டு திருடி சென்றுள்ளார் என்ற உண்மை அம்பலமானது.

இது குறித்த புகாரில் திருமணம் செய்த புதுப்பெண் மற்றும் ஏஜெண்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து நகை, பணம் மீட்கப்பட்டது.