வழுக்கை விழுந்த இடங்களில் உடனே முடி வளர உதவும் கருப்பு மிளகு! எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?

552

கருப்பு மிளகு…

கருப்பு மிளகு முடியின் வேர்களை வளர செய்கிறது. இந்த மிளகு பாக்டீரியா எதிர்ப்பு குணங்களை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

முடி உதிர்தலை குறைக்க செய்யும். கருப்பு மிளகில் வைட்டமின் சி இருப்பதால் இது முடி உடைதலையும் மெலிந்து போவதையும் தடுக்க செய்கிறது. வழுக்கையின் ஆரம்பத்தில் இதை கண்டறிந்து பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்.

மேலும், கருப்பு மிளகில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றமானது முடி முன்கூட்டியே நரைப்பதை தடுக்கிறது. இதனுடன் தயிர் சேர்த்து பயன்படுத்தும் போது தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது.


தயிருடன் கருப்பு மிளகுத்தூள்

ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகுத்தூளில் மூன்று டீஸ்பூன் தயிரில் கலக்கவும். உச்சந்தலையில் ஒரு பேஸ்டுடன் மசாஜ் செய்து உச்சந்தலை முழுக்க வட்ட வடிவமாக மசாஜ் செய்யவும்.

இந்த கலவை கூந்தல் முழுக்க தடவி விடுங்கள். பிறகு ஒரு மணி நேரம் கழித்து பிறகு இலேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு தலைமுடியை கழுவி விடவும்.

ஆலிவ் எண்ணெயில் கருப்பு மிளகு தூள்

ஆலிவ் எண்ணெயில் கால் டீஸ்பூன் மிளகு தூள் சேர்க்கவும், இதை நன்றாக குழைத்து உச்சந்தலையில் மட்டும் படும்படி நன்றாக கலந்து விடவும். இந்த கலவை முடியின் வேர்களுக்கு நன்றாக பரவ வேண்டும். பிறகு 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தலையில் விட்டு குளிர்ந்த நீரில் கூந்தலை கழுவி எடுக்கவும்.