விஜயகாந்துக்கு பழைய கம்பீர குரல் வந்துவிட்டது! மருத்துவர் கூறியுள்ள தகவல்!!

845

விஜயகாந்திற்கு பழைபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது என அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டார்.

இதற்காக அமெரிக்காவுக்கு சென்று முன்னர் சிகிச்சை எடுத்து வந்தார். உடல்நிலை ஒத்துழைக்காததால் விஜயகாந்தால் தமிழக அரசியலில் முன்பு போல பரபரப்பாக செயல்படமுடியவில்லை. இந்த நிலையில் அவருக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் சங்கர் விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணமுடிகிறது.

மேலும், விஜயகாந்த்திற்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய் இருந்துள்ளது என்று தெரிவித்த மருத்துவர் அதை ஆரம்பத்தில் கண்டுபிடிக்காமல் விட்டுள்ளனர். அமெரிக்கா சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று வந்தனர். ஆனால் அவருக்கு நரம்பு ரீதியான பிரச்சனையை சரி செய்ய முடியவில்லை.

அதை தற்போது அக்குபஞ்சர் முறையில் சரி செய்து வருவதாகவும் மருத்துவர் தெரிவித்தார். கடந்த 20 நாட்களாக அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இன்னும் ஒரு அறுபது நாள் சிகிச்சை மட்டும்தான் இருக்கிறது என்று தெரிவித்த மருத்துவர், சரியாக மூன்று மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.

நீங்கள் எதிர்பார்த்ததை போல சிறுத்தையாக வேங்கையாக விஜயகாந்த் வெளியே வருவார் எனவும் பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது என்றும் சங்கர் தெரிவித்தார். இந்த செய்தி தேமுதிக தொண்டர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளதோடு, அவர் மீண்டும் அரசியல் களத்தில் கம்பீரமாக களம்கண்டால் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here