வெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன தெரியுமா?

1207

வெந்தயம்….

வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது உணவுக்கு சிறந்த சுவையை அளிப்பதில் இருந்து பல்வேறு வகையான வியாதிகளை போக்குவது வரைக்கும் இதன் பயன்கள் ஏராளம் ஆகும். வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன.

மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் ஏ போன்றவைகளும் அடங்கியுள்ளன.

அதுமட்டுமின்றி வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை விட, வெந்தயம் ஊற வைத்த நீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. அந்தவகையில் தற்போது தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீரை ஊற வைத்து குடிப்பதனால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.


வெந்தய நீரைத் தயாரிப்பது?

ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை 2 டம்ளர் நீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.

இதை உட்கொள்ளும் முன் உங்களுக்கு அலர்ஜி மற்றும் பிற பிரச்சனை ஏற்படுகிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டியது முக்கியம்.
நன்மைகள்

வெந்தயம் ஊற வைத்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால் அசிடிட்டியில் இருந்து விடுபட உதவும்.

ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.

செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவராயின், வெந்தயம் ஊற வைத்த நீரைக் குடிப்பது இப்பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.

வெந்தயத்திற்கு கல்லீரலில் எல்.டி.எல் ஏற்பிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறன் உள்ளதால், அது செல்களில் கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, இரத்த ஓட்டத்தில் இருந்து வெளியேற்றுகிறது.

வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதனால் அது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, செரிமானத்திற்கு உதவி புரிந்து, அழகான சருமத்தைத் தருகிறது.