29 வயதில் 40 கோடி…. சாதித்து காட்டிய இளம் பெண் தொழிலதிபர் : சாதனைப் பெண்ணின் கதை!!

278

நீலம் சிங்..

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் நீலம் சிங். இவர் நடத்தி வரும் தி பர்கர் கம்பெனி மூலம் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். 29 வயதாகும் நீலம் சிங், ஐந்து ஆண்டுகளில் தனது நிறுவனத்தின் மூலம் 40 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.

குர்கானில் பிறந்த நீலம் சிங் பி.காம் படிப்பை முடித்தார். அதன் பின் MBA படிப்பை முடித்தவுடன் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் தொழில் முனைவோராக வேண்டும் என்று விரும்பிய நீலம், ஐந்து ஆண்டுகள் தான் சம்பாதித்த பணத்துடன் 2016ஆம் ஆண்டு வேலையை விடுத்துள்ளார்.

ஏற்கனவே கல்லூரி விழாவில் சிறிய உணவகத்தை அமைத்து, சுமார் ஒரு லட்சம் லாபம் ஈட்டிய அனுபவம் உள்ளதால் உணவகம் அமைக்க முடிவு செய்தார்.


அதனைத் தொடர்ந்து தன்னிடம் இருந்த பணத்தைக் கொண்டு 2018ஆம் ஆண்டு தி பர்கர் கம்பெனியை தொடங்கினார். 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது தி பர்கர் கம்பெனியின் கிளை வணிக மொடலை உருவாக்கிய நீலம், ஆரம்ப காலங்களில் சிறிய பணியாளர்களுடன் தன் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

முதலாளியாக மட்டும் நினைத்துக் கொள்ளாமல் உணவகத்தில் அனைத்து வேலையையும் நீலம் செய்துள்ளார். இவ்வாறாக உயர்ந்த அவரது நிறுவனம் தற்போது ஏழு மாநிலங்களில் 100 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது.

நித்தேஷ தன்கர் என்பவரை திருமணம் செய்துகொண்ட நீலம் சிங், 29 வயதில் கோடீஸ்வரராக உயர்ந்து பல பெண்களுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகிறார்.