4 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

579

திருச்சியில்..

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சைமலை தோணுர் கிராமத்தில் அழகேசன் – சந்தியா தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். அழகேசன் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

அழகேசன் – சந்தியா தம்பதிக்கு திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு வந்ததாக தெரிகிறது.

இதனிடையே, லாரி ஓட்டும் பணியை விட்டுவிட்டு, விவசாய பணிக்கு செல்லும்படி கணவரிடம் சந்தியா கூறிவந்துள்ளார். எனினும் போதிய பணி இல்லாததால் அவரும் லாரி ஓட்டுவதற்கு அவ்வப்போது சென்றுள்ளார்.


இந்த நிலையில் லாரி ஓட்டுனரான அழகேசன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். லாரி ஓட்டுவதற்கு செல்லவேண்டாம் என கூறியபோதும், அங்கு செல்வதாக கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது.

சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முசிறி கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 4 ஆண்டுகளில் பெண் இறந்து போன சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.