4 மாதங்களில் 16 கிலோ எடை குறைத்த இளைஞர்! மூன்று வேலையும் இப்படி சாப்பிடுங்க… பிட்னஸ் ரகசியங்கள் இதோ..!

768

நொய்டாவை சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுடைய உடல் எடையை 4 மாதங்களில் 16 கிலோ குறைத்து தற்போது தனது தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கி உள்ளார்.

யாட்டின் குப்தா 32 வயது இளைஞர். அவர் தன்னுடைய உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் கண்டு அதிச்சியுற்றார்.

மேலும் அவருடைய உடல் எடையும் அதிகமாக இருந்தது. ஆகவே இது மாற்றத்திற்கான தருணம் என்று அவர் உணர்ந்தார்.

இந்த ஊரடங்கு காலகட்டத்தைப் பயன்படுத்தி தன்னுடைய உடை எடையை குறைத்து தற்போது மிகவும் பிட்டாக காணப்படுகிறார்.

அவரின் ஆரோக்கியமான உணவுத்திட்டம்
காலை உணவு

1 கிண்ணம் முஸ்லி மற்றும் டோண்டு பால், ஒரு கிண்ணம் முளை விட்ட தானியம், (ஊறவைத்த கருப்பு உளுந்து அல்லது பச்சை பயறு ), 1 வாழைப்பழம், ஒரு சிறிய கிண்ணம் மாதுளை பழம், அல்லது ஒரு சிறிய கிண்ணம் பருவகால பழங்கள் (பப்பாளி, அன்னாசி, தர்பூசணி அலல்து கிர்ணி பழம் )


மதிய உணவு

ஒரு கிண்ணம் வேக வைத்த பருப்பு, (ராஜ்மா, மைசூர் பருப்பு, பச்சை பருப்பு அல்லது கொண்டைக்கடலை) , 1 சிறிய கப் ஸ்டார்ச் இல்லாத அரிசி சாதம், 2-3 சப்பாத்தி (நெய் இல்லாமல்), ஒரு பகுதி சாலட் , 1 சிறிய கிண்ணம் தயிர்.

மாதவிடாய் ஒரு மாத காலம் தள்ளிப் போனா நிச்சயம் கர்ப்பமாதான் இருக்குமா? வேறு என்னலாம் இருக்கலாம்?…

இரவு உணவு

1 பெரிய கிண்ணம் பச்சை காய்கறிகள் கடுகு எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்பட்டது. (சுரைக்காய், வெண்டைக்காய், பீன்ஸ், பசலைக் கீரை, பூசணிக்காய்), நெய் சேர்க்காமல் தயாரித்த 2 சப்பாத்தி அல்லது காய்கறி ஓட்ஸ் மற்றும் சாலட்.

உடற்பயிற்சிக்கு முந்தைய உணவு

4-5 ஊறவைத்த பாதாம் , 3 ஊறவைத்த வால்நட் , 2 கிமியா பேரிச்சை, 4-5 ஊறவைத்த உலர் திராட்சை

உடற்பயிற்சிக்கு பின் உட்கொண்ட உணவு

1 க்ளாஸ் ப்ரோடீன் ஷேக், 1 கிண்ணம் பருவகால பழங்கள் (பப்பாளி, அன்னாசி, தர்பூசனை அலல்து கிர்ணி). தினமும் இந்த வழக்கத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் நான் ஏற்படுத்தவில்லை. எந்த நாளிலும் உடற்பயிற்சி செய்யாமல் இருந்ததில்லை.

என்னுடைய உடற்பயிற்சி வழக்கம்

தினமும் 5-6 கிமீ ஒட்டப்பயிற்சி , 12-15 சுற்று சூரிய நமஸ்காரம், அல்லது 15-20 புஷ் அப் பயிற்சி. தினமும் ஒரு மணி நேரம் பிராணாயாமம் மற்றும் யோகாசனம் பயிற்சி செய்தேன்.

பிட்னஸ் ரகசியங்கள்

நமது உடல் ஆரோக்கியமாகவும் பிட்டாகவும் இருக்க உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே வழக்கமான உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான உணவு உட்கொள்வதையும் உறுதி செய்வதால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். உணவு வேளைகளைத் தவற விடுவது, தேவையற்ற உணவுகளை உட்கொள்வது ஆகியவற்றை விடுத்து, ஆரோக்கியமான உணவு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை, உணவு திட்டம் குறித்த தகவலை வெளியிட்ட அவர், 18 நாட்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் அது நமது பழக்கமாக மாறி விடும்.

எடை இழப்பிற்கான பயணத்தில் உணவு ஒரு முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்தேன்.

பலரும் எடை இழப்பிற்கான திட்டத்தில் உடற்பயிற்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணவிற்கு கொடுப்பதில்லை. நீங்கள் நினைத்தபடி உடல் எடை குறைந்த பிறகும் உடற்பயிற்சி மற்றும் உணவு திட்டத்தை கைவிட வேண்டாம் என்றும் தன் நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.

விடா முயற்சி ஒரு நாள் வெற்றி கொடுக்கும்… சிறிய ஆரம்பமும் சிறந்த முன்னேற்றம் ஆகும். நீங்களும் இவரின் உணவு திட்டத்தினை கடைப்பிடித்து ஆரோக்கியமாக வாழுங்கள்.