65 வயது நபரை காதலித்து திருமணம் செய்த 25 வயது பெண் : நிலைகுலைந்த பெற்றோர்!!

707

மேகனா…

45 வயதுடைய முதியவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்த இளம்பெண் இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டம், குனிகள் சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகனா (25). மேகனாவுக்கும் ஏற்கனவே ஒரு வாலிபருடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக மேனகாவின் கணவர் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார்.

இதனால், மேகனா காவல்நிலையத்தில் புகார் அளித்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனைத்தொடர்ந்து தனிமையில் வாடிய மேகனா, சிக்கத்தானேகுப்பே கிராமத்தை சேர்ந்த சங்கரண்ணா (45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

திருமணம் செய்துகொள்ள மேகனா விருப்பம் தெரிவிக்க, இதற்கு பேரன் பேத்தி எடுத்த முதியவரான சங்கரண்ணாவும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து கடண்ட்க்ஹ திங்கட்கிழமை சக்கதனகுப்பே கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து இந்த வினோத காதல் ஜோடிகளின் திருமணம் எளிமையாக நடந்தது.

இவர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், திருமணம் ஆகாத 90ஸ் கிட்ஸ் பலரும் கதறிய படி தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.