9 பெண்களை திருமணம் செய்த பிரபலம்.. 10 ஆவது திருமணத்திற்கு வெயிட்டிங்!!

4820

பிரேசில்…

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் ஒருவர் இதுவரை 9 பெண்களை திருமணம் செய்துள்ளதோடு கூடிய விரைவில் இன்னும் ஒருவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் அதற்கடுத்து மொத்தம் 10 மனைவிகள் வரை திருமணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆர்தர் ஓ உர்சோ என்ற அந்த பிரபலம் பலதாரமண (Polygamous Relationship) உறவில் இருந்து வருகிறார். முதல் மனைவி லுவானா கசாகி என்பவருக்கு பிறகு, தொடர்ந்து 8 இணையர்களை அவர் மணமுடித்துள்ளார். சுதந்திரமான காதலை கொண்டாடுவதற்குதான் இந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்ததாக உர்சோ தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அதில் விரிசல் விழுந்துள்ளது. விரைவில், அவரின் மனைவிகளுள் ஒருவரான அகதா என்பவரை விவாகரத்து செய்ய உள்ளதாக ஆர்தர் முடிவெடுத்துள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அகதா தன்னை ஒருதார மண உறவுக்கு வற்புறுத்தியதாகவும், அகதா உடன் மட்டும் மண உறவில் இருக்க கூறியதாகவும் ஆர்தர் தெரிவித்துள்ளார். இதனாலேயே இரண்டு ஆண்டுகளாக மண உறவில் இருந்த அகதாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.

விவாகரத்து குறித்து ஆர்தர் கூறுகையில் ,”அகதா என்னை முழுவதுமாக சொந்தம் கொண்டாட விரும்பினாள். இதில் எந்த அர்த்தமும் இல்லை. நாம் பகிர்ந்துதான் வாழ வேண்டும் என கூறுகிறேன். நான் அகதாவை பிரிவதைப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறேன். மேலும் அகதா கூறிய சாக்குப்போக்கால் ஆச்சரியப்பட்டேன்.

அகதாவின் தேவைகள் அவரது மற்ற மனைவிகளுடனான உறவில் சிக்கல்களை ஏற்படுத்தியது. எனது மற்ற மனைவிகள் அகதாவின் அணுகுமுறை தவறானது என்று நினைக்கிறார்கள். மேலும் அவர் ஒருவித சாகசதிற்காகவே திருமணம் செய்து கொண்டார் என்றும் உண்மையான உணர்வுகளுக்காக அல்ல என்றும் மற்ற மனைவிகள் நினைக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

மேலும், தனக்கு மொத்தம் 10 மனைவிகள் வரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அனைவருடனும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆர்தர் தனது ஆசையை வெளிக்காட்டியுள்ளார்.

“எனக்கு ஒரு கற்பனை உண்டு; எப்பவுமே பத்து திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன். எனக்கு ஒரு பெண் குழந்தைதான் உள்ளது. இருந்தாலும் எல்லா மனைவிகளுடனும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது.

அனைவரின் மீது ஒரே அளவான அன்புதான் வைத்துள்ளேன். அதனால், ஓரீருவருடன் மட்டும் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது அநீதியானதாக தோன்றுகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.