Fact Check…மூன்று கண்களுடன் பிறந்த அதிசய குழந்தை! வைரலாகும் வீடியோ!!

651

சமூகவலைத்தளங்களில் மூன்று கண்ணுடன் இருக்கும் குழந்தையின் வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மை என்ன என்பது தெரியவந்துள்ளது.

தற்போது இருக்கும் காலகட்டத்தில் சமூகவலைத்தளங்களில் கொஞ்சம் வித்தியாசமான வீடியோ பகிரப்பட்டால், அது உடனடியாக வைரலாகிவிடுகிறது.

அந்த வீடியோ உண்மை தானா? என்பதை எல்லாம் பலர் பார்ப்பதில்லை, அதில் என்ன இருக்கிறதோ, அதை அப்படியே பின்பற்றி பகிர்ந்து விடுகின்றனர்.

அப்படி ஒரு வீடியோ தான் கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் குழந்தை ஒன்று மூன்று கண்களுடன் இருப்பது போன்று உள்ளது.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் நடத்திய ஆய்வில், இது உண்மையில்லை, வீடியோ எடிட்டிங் என்று குறிப்பிட்டுள்ளது.

அந்த குழந்தையின் வலது கண்ணும், நெற்றிக் கண்ணும் ஒரே மாதிரியான அசைவுகளை கொண்டுள்ளது.

மூன்றாவது கண்ணோடு குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிது,

இது டிப்ரோசோபஸ் என்று அழைக்கப்படும் ஒரு அரிய பிறவி கோளாறின் ஒரு பகுதியாக நிகழ்வதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here