அட! இந்த பொருட்களையெல்லாம் வைத்து கூட குழம்பு வைக்கலாமா?

825

இட்லி, தோசை, சப்பாத்தி என்று சுலபமாக டிபன் வகைகளை செய்து விட்டாலும், இதற்கு தொட்டுக்கொள்ள, தினம்தோறும் சட்னி, குருமா, சாம்பார் என்றுதான் நம் வீட்டில் செய்வோம். இவைகளைத்தாண்டி சுலபமான முறையில் பத்தே நிமிடத்தில் சுவையான குழம்பு எப்படி வைப்பது?

பேக்கரியில் இருந்து வாங்கும் பெரிய காராசேவு, சிறு காரா பூந்தி, பக்கோடா இந்த மூன்று பொருளை வைத்து நொடிப்பொழுதில் சட்டென்று ஒரு குழம்பை தயாரிக்கலாமே! அடுத்ததாக வெறும் உருளைக்கிழங்கு வெங்காயம் இது இரண்டையும் வைத்து ஒரு குழம்பு எப்படி செய்வது? பார்த்து விடலாமா?

இந்த குழம்பு வகைகளின் செய்முறையை, பார்த்துவிட்டு இதெல்லாம் ஒரு குழம்பு வகையா? என்று செய்யாமல் மட்டும் விட்டுவிடாதீர்கள். சுலபமாக, சுவையாக இருக்கும் குழம்புவகைகள் இவை! ஒரு முறை முயற்சி செய்து பார்த்துவிட்டு,


அதன் பின்பு உங்கள் வீட்டில் செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்! சிலபேருக்கு இந்த குறிப்புகள் தெரிந்திருக்கலாம். சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரியாதவர்கள் படித்து பயன் பெறுங்கள்!