அண்ணனின் பேச்சை கேட்காததால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… பதற வைக்கும் சம்பவம்!!

244

தமிழகத்தில்..

தேனியின் கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்தவர் விமல் (34). இவரும், மனைவி செல்லப்பிரியாவும் (32) ஒன்றாக வசித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது விமல் தன் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய விமல், மனைவி செல்லப்பிரியாவின் சகோதரன் செல்லப்பாண்டியை (36) வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது தன் தங்கியிடம் விமலுடன் சேர்ந்து வாழுமாறு செல்லப்பாண்டி அறிவுறுத்தியுள்ளார். ஆனால் செல்லப்பிரியா அவரது பேச்சை மதிக்காமல் எதிர்த்து பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி தன் தங்கையை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த செல்லப்பிரியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் தப்பியோடிய விமல் மற்றும் செல்லப்பாண்டியை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here