அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்… மனைவி கையில் இருந்த செல்போன் : ஒரு சில நிமிடத்தில் நடந்த துயரம்!!

1594

வல்வெட்டித்துறையில்..

இலங்கையின் வல்வெட்டித் துறையை அடுத்த நெடியகாடு என்னும் பகுதியை சேர்ந்தவர் சரவணபவா ரஞ்சித் குமார் (வயது 30). இவரது மனைவியின் பெயர் கிருசாந்தினி (வயது 26).

இவர்கள் இருவரும் தங்களின் அறையில் உறங்கி கொண்டிருந்த போது, அதிகாலை சுமார் 4 மணியளவில் திடீரென அவர்களின் அறையில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் இருவரும் அலறவும் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனைக் கேட்டதும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள், உடனடியாக அவர்களின் அறைக் கதவை உடைத்து உள்ளே செல்லவும் முயன்றுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் செல்வதற்கு முன்பாக, ரஞ்சித் குமார் மற்றும் அவரது கிருசாந்தினி ஆகியோர் தீயில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்த சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அந்த சமயத்தில், அறையில் மின் கசிவு ஏற்பட்டிருப்பதும், மேலும் பெட்ரோல் இருந்ததால் தீ வேகமாக பரவி சிக்கலை உண்டு பண்ணியதாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளது. அதே போல, உயிரிழந்த மனைவி கிருசாந்தினி கையில், மொபைல் சார்ஜர் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்ந்து, ரஞ்சித் குமார் மற்றும் கிருசாந்தினி ஆகியோரின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தீக்காயங்களில் சிக்கி அவர்கள் உயிரிழந்ததுள்ளனர் என அறிக்கை வெளியானதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர்களின் மொபைல் போன் அல்லது சார்ஜர் என ஏதாவது வெப்பமாகி தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அதே போல, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருவதால், தங்களின் தேவைக்காக பெட்ரோலையும் பலர் வாங்கி வீட்டிலேயே சேமித்து வைத்து வருகின்றனர்.

அப்படி ரஞ்சித் குமாரும் பெட்ரோல் வாங்கி தனது படுக்கைறையில் பெரிய கேன் ஒன்றில் அவர் பெட்ரோலை சேமித்து வைத்திருந்துள்ளார். இதுவும் தடயவியல் சோதனையில் தெரிய வந்த நிலையில், மின்கசிவு ஏற்பட்டு பின்னர் இந்த பெட்ரோல் மூலமும் தீ விபத்து அதிகரித்ததாக கூறப்பட்டுள்ளது.